தினமும் வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 17, 2024
Hindustan Times Tamil
ஒன்று முதல் இரண்டு டிஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து வெறுவயிற்றில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன
வளர்சிதை மாற்றம் விரைவுபடுத்தும் வெந்தயம் ஊற வைத்த நீர் வேறு என்னென்ன நன்மைகள் தருகிறது என்பதை பார்க்கலாம்
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துகள் இருக்கின்றன. இவை செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான பாதையில் உணவு இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது
வெந்தயத்தில் இடம்பிடித்திருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை தந்து உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது. அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வதை தடுக்கிறது
ஆன்டிஆக்ஸிடன்டகள் நிரம்பியிருப்பதோடு, வீக்கத்துக்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கும் வெந்தயம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பருக்கள் மற்றும் கரைகள் ஏற்படுவதை தடுக்கிறது
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுவதுடன், அந்த காலகட்டத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் வயிறு உப்புசம் தொடர்பான அறிகுறிகளை குறைக்கிறது
இதில் இருக்கும் புரதம், நிக்கோடினிக் அமிலம் தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுவதுடன், தலைமுடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது
இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்