பட்ஜெட் தாக்கலின்போது கவனம் பெறும் நிர்மலா சீதாராமனின் புடவைகள்!
By Kathiravan V Feb 01, 2025
Hindustan Times Tamil
கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நீல நிற துணியில் வெள்ளை நிறத்தில் சுழலும் மலர் வடிவங்கள் இடம்பெற்று இருந்த புடவையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து இருந்தார்.
2023ஆம் ஆண்டில் கருப்பு மற்றும் தங்க நிற பார்டரில் சிவப்பு நிற புடவையை நிதியமைச்சர் அணிந்து இருந்தார்.
2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிகழ்வின் போது பழுப்பு மற்றும் சிவப்பு நிற வண்ணங்கள் கொண்ட புடவையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து இருந்தார். அதில் டெரக்கோட்டா வண்ணத் தட்டு, யானை உள்ளிட்ட உருவங்கள் இடம்பெற்று இருந்தன
2021ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, சிவப்பு நிற புடவையில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற மாங்காய் வடிவங்களை கொண்ட புடவையை நிதியமைச்சர் அணிந்து இருந்தார். அதில் இளம் பச்சை நிற பார்டரும் இருந்தது.
2020ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நிகழ்வின் போது மங்களத்தை பிரதிபலிக்கும் வகையில் மஞ்சள் நிற புடவையுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் தங்க நிற பார்டர்களும் இடம்பெற்று இருந்தது.
2019ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, தனிமனான தங்க நிற பார்டர்களை கொண்ட இளஞ்சிவப்பு நிற சேலையை அணிந்து இருந்தார்.
2019ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, தனிமனான தங்க நிற பார்டர்களை கொண்ட இளஞ்சிவப்பு நிற சேலையை அணிந்து இருந்தார்.
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுபானி பார்டரை கொண்ட க்ரீம் மற்றும் தங்க நிறங்களை உள்ளடக்கிய புடவையை அணிந்து இருந்தார். இது பீகார் மாநிலத்தின் கைத்தறி பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது
பேரீச்சம்பழத்தில் ஐஸ்கிரீம் செய்ய எளிய வழிகளைப் பார்ப்போம். அவ்வாறு செய்யத்தேவையான பொருட்கள் குறித்தும் அறிந்துகொள்வோம்.