ஜோதிடத்தில் ஆடி மாதம் கர்கடக மாதம் என்னும் கடக மாதமாக கூறப்படுகிறது. இம்மாதத்தில் பலர் அம்மனை வழிபடுகின்றனர்.
புராண கதைகளின்படி, உலகில் அமைதியை நிலைநாட்ட சக்தி, ஆடிவெள்ளியில் பச்சையம்மனாக காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது
ஆடிவெள்ளி அம்மனுக்கு உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆடிவெள்ளியில் வழிபாடு செய்தால் சக்தி தேவியின் அனுகிரகத்தைப் பெறலாம் என்பது ஐதீகம்.
ஆடி வெள்ளி அம்மனின் அவதாரங்களில் முக்கியமான மாரிக்கு உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்நாளில் கூழ் காய்ச்சி அம்மனுக்குப் படைத்தால் நினைத்தது கைகூடும் என்பது நம்பிக்கை
ஆடி இறுதிவெள்ளியான இன்று லட்சுமி தேவிக்கு உகந்த வரலட்சுமி நோன்பு கொண்டாடப்
படுகிறது. இந்நாளில் சுமங்கலிகள் தங்கள் கணவரின் ஆயுள் கூட வேண்டுகின்றனர்
ஆடி வெள்ளியில் வழிபாடு நடத்தும்போது எதிர்மறை சக்திகள் அகலும், எண்ணியது கைகூடும் என்பது ஐதீகம்!
ஆடி வெள்ளி நாகதேவதைகளுக்கும் வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்நாளில் நாகர் சிலைகளுக்கு பால், சர்க்கரை, வெல்லம் படைத்தும் வழிபாடு நடத்தப்படுகிறது