கண்களின் ஆரோக்கியோத்தை பேனி காக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 04, 2025
Hindustan Times Tamil
நமது கண்பார்வை வயதுக்கு ஏற்ப மாறுகிறது, இது கண்புரை மற்றும் கிளௌகோமா போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கிறது. எளிமையான பழக்கங்களைக் கடைப்பிடிப்பது அபாயங்களைக் குறைத்து பிற்காலத்தில் ஆரோக்கியமான பார்வையை பராமரிக்க உதவும்.
எளிமையான பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் பார்வை திறன் பரிபோகும் அபாயத்தை குறைக்க உதவுகிறது
கண்களின் ஆரோக்கியத்தை அன்றாடம் நாம் சாப்பிடும் சில உணவு வகைகளின் மூலம் பேனி பாதுகாக்கலாம். அடர் மஞ்சள், பச்சை காய்கறிகள் மற்றும் ஒமேகா 3 நிறைந்த மீன்களான டுனா மற்றும் சால்மன் ஆகியவை கண் பார்வையை பெறுவதற்கான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன
சூரிய ஒளி வெளிப்பாடு கண்பார்வைக்கு தீங்கு விளைவிக்கும், கண்புரை, மாகுலர் சிதைவு, கார்னியல் அழற்சி (கெராடிடிஸ்) மற்றும் டெரிஜியா போன்ற கார்னியல் வளர்ச்சிகளின் அபாயங்களை உயர்த்துகிறது. எனவே சன் கிளாஸ் அணிவதை வழக்கமாக்கி கொள்ளலாம்
தொற்று பாதிப்புகளை தடுக்க, குறிப்பாக காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு, கண்களைத் தொடுவதற்கு முன்பு, லேசான சோப்பைப் பயன்படுத்தி உங்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும். கண்களை கைகளால் கசக்குவதை தவிர்க்க வேண்டும்
புகைபிடித்தல் பார்வை நரம்புக்கு செல்லும் இரத்த நாளங்களை சேதப்படுத்துவதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது
வழக்கமான உடற்பயிற்சி, கண் சார்ந்த பயிற்சிகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாடு நாள்பட்ட கண் பிரச்னைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்
குறிப்பாக 40 வயதை நெருங்கினால் வழக்கமான கண் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். கிளௌகோமாவின் வரலாறு அல்லது சிகிச்சையளிக்கக்கூடிய கண் பிரச்னைகளை ஆரம்பத்தில் கண்டறிய அவை உதவுகின்றன