தைராய்டு ஆரோக்கியத்தை பராமரிக்க உங்களது உணவு டயட்டில் கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 27, 2024

Hindustan Times
Tamil

வளர் சிதை மாற்றம், ஆற்றல் உற்பத்தி, ஒட்டு மொத்த உடல் செயல்பாடும் சீராக இருக்க தைராய்டு ஆரோக்கியம் முக்கியமானதாக உள்ளது 

நீங்கள் பின்பற்றும் உணவு டயட் தைராய்டு ஆரோக்கியத்தை பேனி பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது

ஐயோடீன், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு முதல் தைராய்டு ஆரோக்கியத்துக்கு உதவும் உணவு வகைகளை பார்க்கலாம்

ஐயோடீன் உப்பு, மீன், இறால், கடற்பாசி, பால் சார்ந்த பொருள்களான பால், யோகர்ட், சீஸ், முட்டை போன்றவை தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளாக இருக்கின்றன

செலினியம் நிறைந்த பிரேசில் நட்ஸ், சூரிய காந்தி விதை, சூரை மீன், சிக்கன், முட்டை போன்ற தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது. இதனால் அழற்சிகளை குறைக்கிறது

சாலமன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்று அழற்சிக்கு எதிரான பண்புகள் இருப்பதுடன், தைராய்டு பிரச்னைக்கு தீர்வு அளிப்பதாக உள்ளது

பழங்களில் பெர்ரி, ஆரஞ்சு மற்றும் காய்கறிகளில் கேரட், பசலை கீரை, கொடை மிளகாய் ஆகியவை தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள்ஸ, நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கு ஆதரவு தருகிறது

மெலிந்த இறைச்சிகள், பருப்பு வகைகள் ஆகியவை தைராய்டு ஹார்மோன் தொகுப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்துக்கு ஆதரவு தருகிறது

குயினா, பிரவுன் அரிசி, ஓட்ஸ், முழு கோதுமை போன்ற நார்ச்சத்து மிக்க முழு தானியங்கள் மற்றும் அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவுகிறது

அவகோடா, ஆலிவ் எண்ணெய், நட்ஸ்,விதைகள் போன்றவை ஹார்மோன் உற்பத்திக்கு ஆதரவு தருகிறது. அத்துடன் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுதலுக்கு உதவுகிறது

Parenting Tips : சொல் பேச்சு கேட்மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை கீழ்படியவைக்கும் சூட்சமங்கள் இவைதான்!