பார்த்தாலே சுவைக்க தோன்றும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு.. ருசி அட்டகாசம் தாங்க!
Canva
By Pandeeswari Gurusamy Apr 12, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள்: பத்து பிஞ்சு கத்தரிக்காய், இருபது கிராம் புளி, நல்லெண்ணெய் மூன்று டீஸ்பூன், வரமிளகாய் -6, தக்காளி - 2, தனியா, உளுந்து, கடலைப்பருப்பு , வேர்க்கடலை தலா 2 ஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கடுகு சீரகம் அரை டீஸ்பூன் தாளிக்க எண்ணெய் சின்ன வெங்காயம் நூறு கிராம், சுவைக்க உப்பு, தேங்காய் துருவல் கால் கப், கறிவேப்பிலை ஒரு கொத்து, சிறிது மஞ்சள் தூள்
Pixabay
புளியை ஊற வைத்து விட்டு வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
Pixabay
வேர்க்கடலை, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, தனியா, வெந்தயம், சிட்டிகை மஞ்சள் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை வாணலியில் எண்ணெய் இல்லாமல் போட்டு வறுத்து பொடித்து கொள்ள தனியாக எடுக்கவும்.
Pixabay
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி வரமிளகாய் கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.வறுத்த மசாலா பொருட்களுடன் வெங்காயம் தக்காளியை சேர்த்து அரைகுறையாக அரைத்து எடுக்கவும்.
Pixabay
முழு கத்திரிக்காயை நீள வாக்கில் நான்காக கீறி விட்டு அரைத்த மசாலா விழுதை நடுவில் வைத்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அரை வேக்காடு பதத்தில் கத்திரிக்காயை எடுத்துக் கொள்ளவும்.
Canva
வதங்கியதும் புளி கரைத்த நீரை வடிகட்டி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை போட்டு கொதிக்க விடவும்.
Canva
குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். இந்த கத்தரிக்காய் குழம்பு பார்த்தாலே சாப்பிட தூண்டும். ருசி அருமையாக இருக்கும்.
Canva
எப்போதும் துணை மீது அன்பை பொழியும் ரொமாண்டிக்கான ராசிக்காரர்கள் யார் பாருங்க!