சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார். 

By Kalyani Pandiyan S
May 12, 2025

Hindustan Times
Tamil

3,6, 11 ஆகிய இடங்களில் சனி பகவான் இருப்பது நல்லது என்று கூறுகிறார்கள். 

ஏழரை சனி காலமானது மூன்று விதமாக வரும். எ.காட்டாக  உங்கள் ராசி மகரம் என்றால், தனுசு ராசிக்கான ஏழரை சனி முடியும் போதே உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்து விடும்.  அடுத்து உங்கள் ராசியில் சனி வரும் போது அது ஜென்ம சனியாக மாறும். அடுத்து கும்ப ராசிக்கு மாறும். அப்போதும் அந்த தாக்கம் இருக்கும். இந்த காலம் 7 1/2 வருஷம் ஆகும். 

இரக்கம், கருணை உள்ளிட்டவற்றிற்கு சனிபகவானே அதிபதி. பணக்காரர் ஆவதற்கு சனி பகவான் வலிமையாக இருக்க வேண்டும். பணக்காரர்கள் வருடத்தின் இறுதியில் தானம் தர்மத்திற்கென்று சிறுதொகையை ஒதுக்கி விடுவார்கள். அது சனியின் தயவை அவர்களுக்குப் பெற்றுத்தரும். 

அஷ்டம சனி காலத்தில் அடுத்தது என்ன செய்யலாம்? என்ற திட்டத்தை வகுக்கு எண்ணத்தை சனி பகவான் கொடுப்பார். ஆனால், கண்டகச்சனி  கடுமையாக இருக்கும். 

சனி பகவானின்  தாக்கத்தை குறைக்க கோழிப்பண்ணையை தினமும் 3 முறை சுற்றிவாருங்கள். இதற்கு காரணம் இருக்கிறது. 

எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள். சனி பகவானின் பகை கிரகங்கள் சூரியனும் செவ்வாயும். இவர்கள் இணைந்து கிடைக்கும் பொருட்களாக கோழி, கோழிப்பண்ணை, கோழிமுட்டை உள்ளிட்டவை பார்க்கப்படுகிறது. அதனால்தான் இந்த பரிகாரம். 

கடும் உழைப்பாளிகள், முதியோர்கள், கடை நிலை மக்கள் உள்ளிட்டோருக்கு உதவி செய்வதின் மூலமாக சனியின் தாக்கத்தை குறைக்கலாம்.  ஜோதிடர்: ராஜேந்திரன் 

மன அழுத்தத்தைக் குறைக்க 5 எளிதான யோகாசனங்கள்