குளிர் காலத்தில் உங்களது கண்களை எப்படி பாதுகாப்பாக வைத்துகொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 13, 2024

Hindustan Times
Tamil

குளிர்ந்த காற்று கண்களில் படுவதால் வறட்சி, அரிப்பு போன்றவை ஏற்படலாம். இதுபோன்ற சிக்கலை தவிர்த்து கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்

சன்கிளால் அணிவது

கோடையை போல் குளிர்காலத்திலும் கண்களை பாதுகாப்பது அவசியமாகிறது. வெளிப்புறத்தில் செல்லும்போது யுவி பாதுகாப்பு சன்கிளாஸ் அணிவதன் மூலம் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்

ஈரப்பதமூட்டி பயன்படுத்துதல்

குளிர்காலத்தில் வீசும் காற்றில் குறைவான ஈரப்பதமே உள்ளது. இது கண்களில் வறட்சியை உண்டாக்குகிறது. எனவே ஈரப்பதமூட்டி பயன்படுத்துவதால் காற்றை ஈரப்பதமாக்கும்

ஸ்கிரீன் நேரத்தை குறைத்தல்

செல்போன், லேப்டாப் போன்ற கேட்ஜெட்களை அதிகம் பார்ப்பதால் கண்களில் சிரமமும், வறட்சியும் ஏற்படுகிறது. எனவே ஸ்கிரீன் நேரத்தை முடிந்த அளவு குறைத்து கொள்ள வேண்டும்

தனிப்பட்ட சுகாதாரம் 

அடிக்கடி கண்களை துடைப்பதை தவிர்க்க வேண்டும். எனவே அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலம் கண்களில் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம்

டயட்டில் மாற்றங்கள் செய்வது

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் ஏ, சி, துத்தநாகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம்

 ’மேஷம் முதல் மீனம் வரை!’ கோடிகளை குவிக்கும் கேள யோகம் யாருக்கு?