உடல் உள்ளுருப்புகளின் செயல்பாட்டுக்கு, குறிப்பாக மூளையிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு மின் வேதி கடத்தல்களை எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் நரம்புகள் பலவீனம் அடைவதையும், பாதிக்கப்படுவதையு்ம தடுக்கவும் சாப்பிட வேண்டிய உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 24, 2025

Hindustan Times
Tamil

நரம்பு மண்டலம், உடலின் பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதவும், தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்புகளுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

பச்சை காய்கறிகளில் ஊட்டச்சத்துகள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை நரம்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிக்க மீன்கள் நரம்புகள் செயல்பாட்டை மேம்படுத்தி அவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அரணாக செயல்படுகிறது 

நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் பி12 சத்துக்கள் மிகவும் அவசியம். முட்டையில் அதிக அளவில் இந்த வைட்டமின்கள் நிறைந்துள்ளன

நட்ஸ் மற்றும் விதைகளில் அதிகப்படியான வைட்டமின் ஈ, மெக்னீசியம் உள்பட இதர தாதுக்கள் உள்ளன. இவை உங்களது நரம்பு மண்டலத்தை வலுவாக வைக்க உதவுகிறது

பீன்ஸ்களில் நார்ச்சத்து, பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை நரம்பு மண்டலத்துக்கு மிகவும் நன்மை தருவதாக உள்ளது

பழங்களை பொறுத்தவரை பெர்ரி வகை பழங்கள் நரம்பு செல்கள் சேதமடைவதில் இருந்த தடுக்கிறது. இதில் நிறைந்திருக்கும் இந்த பணியை செய்கிறது

பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களில் அதிகப்படியான கால்சியம் மற்றும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளன. இவை நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையானதாக உள்ளது

குயினோவில் அதிகப்படியான பி வைட்டமின்கள், மெக்னீசியம் மற்றும் இதய ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இவை நரம்புகளின் ஆரோக்கியத்தை பேனி காக்க உதவுகிறது

மன அழுத்தத்தைக் குறைக்க 5 எளிதான யோகாசனங்கள்