கண்கள் பார்வை தெளிவாகவும், கூர்மையாகவும் பெறுவதற்கு உதவும் உலர் பழங்கள் எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman May 25, 2024
Hindustan Times Tamil
இந்த டிஜிட்டல் உலகில் கேட்ஜெட்களின் ஸ்கிரீன் பயன்பாடானது அதிகமாகவே உள்ளது. அவ்வாறு செய்வதால் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகின்றன
கண்களின் ஆரோக்கியத்தை பேனி காக்க பல்வேறு உணவுகள் இருந்தாலும், சில உலர் பழங்களை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுதன் மூலம் நன்மை பெறலாம்
கண்களுக்கு தெளிவான பார்வை தரும் உலர் பழங்கள் பற்றி பார்க்கலாம்
சுவை மிகுந்து காணப்படும் முந்திரியில் துத்தநாகம் உள்பட கண்களின் கருவிழி ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்ககூடிய தாதுக்கள் ஏராளமாக இருக்கின்றன
கண்களில் செல் மென்படலம் உருவாகவும், அதை தக்க வைக்கவும் வால்நட் உதவுகிறது. இவை அழற்சியை போக்கி, கண்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும் பாதாம், கண்களை ஈரத்தபதத்துடன் வைக்க உதவுகிறது. இதனால் கண்களில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது
கண்புரை, தீங்கு விளைவிக்கும் ஒளி அலைகள் பாதிப்பின் அபாயத்தை குறைக்கிறது பிஸ்தா. ஒட்டு மொத்த கண்களின் ஆரோக்கியத்துக்கும் பிஸ்தா உதவிகரமாக உள்ளது
கோல்டன் நிறத்தில் இருக்கும் உலர் திராட்சைகள், தெளிவான பார்வையை பெற உதவுகிறது. கண் தொடர்பான நோய், இரவில் ஏற்படும் குருட்டுதன்மை ஆகியவற்றை தடுக்கிறது
உடலில் இரும்புச்சத்து அளவை அதிகரிக்க இயற்கையான வழிகளில் ஒன்றாக பீட்ரூட் ரெசிப்பிக்கள் உள்ளன. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் வகையில் சுவையான பீட்ரூட் சூப் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்