கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும் பானங்கள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 20, 2024

Hindustan Times
Tamil

கல்லீரல் வீக்கம் நோய் என்பது, அதில் படியும் கொழுப்பு காரணமாக ஏற்படுகிறது. இதன் விளைவாக அழற்சி மற்றும் வேறு சில உடல் ஆரோக்கிய பிரச்னைகளையும் ஏற்படுத்தும்

கல்லீரல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் பானங்களை பருகுவதன் மூலம் அதில் இருக்கும் நச்சுக்களை நீக்கலாம்

பீட்ரூட் ஜூஸ்

கல்லீரல் செயல்பாட்டுக்கு அத்தியாவசியமான  ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஊட்டச்சத்துகள் இதில் நிரம்பியுள்ளன. கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுக்கிறது

க்ரீன் டீ

இதில் இருக்கும் கேடேசின்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை குறைத்து, கல்லீரலில் கொழுப்பு குவிவதை தடுக்கிறது. அதேபோல் கல்லீரல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கிறது

காபி

காபியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பண்புகள் கல்லீரல் வீக்கம் நோய் பாதிப்பை தடுக்கிறது. சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி, கல்லீரல் சேதம் போன்றவற்றின் ஆபத்தை குறைக்கிறது. காபி அளவுக்கு அதிகமாக குடிப்பதை தவிர்க்கவும்

கெமோமில் தேநீர்

அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கும் கெமோமில் தேநீர், கல்லீரல் வீக்கத்தை குறைக்கிறது. அத்துடன் சீரான தூக்கத்தை பெற உதவுகிறது

நெல்லிக்காய் ஜூஸ்

ஆன்டிஆக்ஸிடன்ட், வீக்கத்துக்கு எதிரான பண்புகள் அதிகமாக நிறைந்திருக்கும் நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் கல்லீரலில் நச்சுக்களை நீக்க உதவுகிறது. கல்லீரல் வீக்கத்துக்கு காரணமாக இருக்கும் ப்ரக்டோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது

ஆரஞ்சு இஞ்சி தண்ணீர்

இந்த காம்போ ஆன்டிஆக்ஸிடன்ட்களை தருவதுடன், செரிமான நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆரஞ்சு நச்சுக்களை நீக்குகிறது, இஞ்சி வீக்கத்தை குறைக்கிறது. எனவே இந்த பானத்தை தொடர்ச்சியாக பருகுவதன் மூலம் கல்லீரல் இயக்கம் சீராகும்

எலுமிச்சை நீர்

வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த எலுமிச்சை சாறு கலந்த நீர் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதோடு, கொழுப்புகள் உருவாகுவதை தடுக்கிறது. இந்த பானத்தை அளவுக்கு அதிகமாக பருகினால் அமிலத்தன்மை ஏற்படலாம்

அதிக புரதம் கொண்ட சாண்ட்விச்கள்