கோடை வெயிலின் சூட்டையும், வெப்பை அலை தாக்கத்தையும் சமாளித்து இளைப்பாற உதவும் பானங்கள் எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman May 04, 2024
Hindustan Times Tamil
அடுத்த சில நாள்களுக்கு வெப்ப அலை வீசும் எனவும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பத்தை சமாளிக்க நாம் சில பானங்களை பருகலாம்
கோடையில் சில பானங்களை பருகுவதன் மூலம் ஆற்றலை இழக்காமல் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்
மெந்தால் உள்ளடக்கம் காரணமாக புதினாவில் குளிர்ச்சி பண்புகள் நிறைந்துள்ளன. புதினா டீ வியர்வையை தூண்டி, உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது
புரோபையடிக்குகள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்திருக்கும் மோர் பருகலாம். இயற்கையான ஆற்றல் அளவை தக்க வைக்க உதவி, சூடான வெப்பநிலையில் உடலை குளிர்ச்சியாக வைக்கிறது
வெந்தயம் டீ வியர்வையை வெளியேற்ற உதவுகிறது. இதனால் உடலும் குளிர்ச்சி அடைகிறது. அத்துடன் உடலில் இருக்கும் நச்சுக்களையும் நீக்க உதவுகிறது
குளிர்ச்சி தரும் பழங்களான தர்ப்பூசணி, ஆப்பிள், ஆப்ரிகாட், கிரான்பெர்ரிக்களில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை அழற்சியை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது
அழற்சிக்கு எதிரான பண்புகள், கால்சியம் உள்ளடக்கம் கொண்டிருக்கும் யோகர்ட் தனியாகவே அல்லது வேறு பழங்களுடன் கலந்தோ சாப்பிடலாம். இது ஒரு புத்துணர்வு தரும் ஸ்மூத்தியாக உள்ளது
கற்றாழை இலைகள் அல்லது அதன் ஜெல் உடல் வெப்பநிலையை குறைக்கிறது. இது சருமத்துக்கு நன்மை தருவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாக்கிறது
Calcium : உடலில் கால்சியம் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் சிலவற்றை பார்க்கலாமா!