தோசையில்
600-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தோசையில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது.
தோசை தயாரிக்க அரிசி மற்றும் உளுந்து ஆகியவை பிரதானப் பொருட்களாகும்.
தோசையில் மசாலா தோசை, வெங்காய தோசை, முட்டை தோசை, ரவா தோசை, நெய் தோசை, பனீர் தோசை எனப் பல வகைகள் பிரபலமாக உண்ணப்
படுகின்றன.
தோசை, இந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும், இலங்கையிலும் காலை உணவாக உண்ணப்
படுகிறது.
தோசை கர்நாடகாவின் உடுப்பி நகரில் தோன்றியது என்று சிலரும், சங்க இலக்கிய காலம் தொட்டு, கி.பி.1ஆம் நூற்றாண்டில் இருந்து தோசை தயாரிக்கப்
படுவதாகவும் தமிழ் வரலாற்று ஆவணங்கள் கூறப்படுகின்றன.
தோசையில் புரதச்சத்து மிகுந்துள்ளது. வீட்டில் தயாரிக்கப்பட்ட தோசையில் சுமார் 112 கலோரிகள் உள்ளன.