தெருவோரத்தில் மலிவான விலையில் கிடைக்கும் மக்காச் சோளத்தின் சிறப்பான நன்மைகள் குறித்து தெரிந்து கொண்டால் அசந்து போவீர்கள்.

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 20, 2024

Hindustan Times
Tamil

மக்காச் சோளத்தில் உள்ள நிறமிச்சத்து, பார்வைத்திறனை அதிகரிப்பது மட்டுமன்றி, தேகத்துக்கு பொலிவைக் கொடுக்கவும் உதவுகிறது.ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் முதன்மை சிற்றுண்டியாக சோளத்தை நாடலாம்.

pixa bay

மக்காச்சோளத்தில் சரியான அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.

pixa bay

பார்வைக் கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

pixa bay

சோளம் குறைந்த அளவு கொழுப்பை கொண்டது. இது இதய ஆரோக்கியத்துக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் வராமல் உதவி புரிகிறது.

pixa bay

மக்காசோளம் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.

pixa bay

கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதம் மக்காசோளத்தில் நிறைந்து காணப்படுவதால் மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.

pixa bay

அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளதால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுவதை தவிர்த்து, உணவு எளிதாகச் செரிமானமாக உதவி புரிகிறது.

pixa bay

சோளத்தில் நிறைந்துள்ள அதிக அளவு நார்சத்து மூல நோய் ஏற்படாமல் தடுக்கும். இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

pixa bay

பரம்பரை காரணம் மட்டுமல்லாமல் உடலில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாட்டாலும் ரத்தசோகை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.

pixa bay

இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்கும்.

pixa bay

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள்! ஆப்பிள்!