உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா.. இந்த ஜூஸ் போதும்!
pixa bay
By Pandeeswari Gurusamy Aug 18, 2024
Hindustan Times Tamil
நெல்லிக்காயை நாம் இதை பச்சையாகவும் சாப்பிடலாம், நெல்லிக்காய் ஜாம் அல்லது மிட்டாய் செய்து, நெல்லிக்காய் ஊறுகாயாகவும் உட்கொள்ளலாம். இது கண்கள், முடி மற்றும் சருமத்திற்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் கொண்டுள்ளது. இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் தினமும் காலையில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும். நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைள் குறித்து இங்கு பார்க்கலாம்.
pixa bay
உடலை எல்லா விதமான தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. நம்மை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது இன்னும் முக்கியமானது. இதற்கு நீங்கள் நெல்லிக்காய் சாறு பருகலாம். சளி, இருமல் தவிர, உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
pixa bay
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. நீங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் தினமும் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்ள வேண்டும். ஹீமோ குளோபின் குறைபாட்டைப் போக்கவும் உதவுகிறது.
pixa bay
நெல்லிக்காய் சாறு தொடர்ந்து குடிப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதயம் சீராக செயல்பட உதவுகிறது.
pixa bay
நெல்லிக்காய் சாறு சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகைள நீக்கும்.சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் சருமம் பளபளப்பாகும்.
pixa bay
நெல்லிக்காய் முடிக்கு மருந்தாக செயல்படுகிறது. வெள்ளை முடியை கருப்பாக்குவதில் நெல்லிக்காய் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கவும் அல்லது தேங்காய் எண்ணெயில் நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து காலையில் தடவவும்.
pixa bay
நெல்லிக்காய் உங்கள் கண் பார்வையை கூர்மையடைய உதவுகிறது. அரிப்பு மற்றும் கண்களில் நீர் வடிதல் பிரச்சனையைப் போக்க நெல்லிக்காய் சாறு எடுத்துக் கொள்ளலாம்.
pixa bay
நெல்லிக்காய் சாறு எடை இழப்புக்கும் உதவுகிறது. உடலில் கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதற்கு , காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை வெதுவெதுப்பான நீரில் குடித்து வந்தால் உடல் எடை குறையும் . உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஏற்கனவே உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசிப்பது அவசியம்.