டிஜிட்டல் திரையில் மூழ்கி இருக்கும் பழக்கத்தில் இருந்து வெளியேற வேண்டுமா!

By Pandeeswari Gurusamy
Nov 27, 2024

Hindustan Times
Tamil

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் டிஜிட்டல் திரையில் மூழ்கி இருக்கின்றனர்.

இந்த பழக்கத்தில் இருந்து புத்துணர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்மார்ட் போன்கள் மற்றும் டிவி திரையிலிருந்து ஓய்வு  எடுத்து உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

போன் பயன்படுத்துவதில் இருந்து விலகி இயற்கையை ரசியுங்கள். சுத்தமான காற்றை சுவாசியுங்கள்

நல்ல புத்தகங்களை தினமும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். 

தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள்.

இது உடல் இளைப்பாற உதவும்.

எப்போதும் சமூக வலைதளங்களில் தொடர்பு கொள்வதை விடுத்து நேருக்கு நேர் பேசுங்கள்.

பெயிண்டிங், டான்ஸ் போன்ற உங்கள் மறந்து போன பொழுது போக்குகளை மீண்டும் கையில் எடுங்கள். தொலைந்து போன உங்களை மீண்டும் புதுப்பித்து கொள்ளுங்கள்.

அலுவலகப்பணி தவிர்த்து மற்ற நேரங்களில் திரையை பயன்படுத்துவதில்லை என்று சவாலாக எடுத்து கொள்ளுங்கள்

All photos: Pexels

ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.