கந்த சஷ்டி கவசத்தை தினமும் 36 முறை சொன்ன பலன் வேண்டுமா.. 5 நிமிடம் போதும்!
Canva
By Pandeeswari Gurusamy Mar 13, 2025
Hindustan Times Tamil
தமிழ் கடவுள் முருகன் இங்கு பலரின் இஷ்ட தெய்மாக விளங்குகிறார். முருக பக்தர்கள் வீடுகளில் தினமும் ஒலிக்க கூடிய பாடலாக கந்த சஷ்டி கவசம் இன்றளவும் விளங்குகிறது.
கந்த சஷ்டி கவசத்தில் "ஒரு நாள் முப்பத்தாறு உருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறு அணிய" என்ற வரி வரும்.
Canva
இதற்கான விளக்கத்தை பட்டிமன்ற பேச்சாளரும், ஆன்மீக சொற்பொழிவாளருமான சுமதி ஸ்ரீ விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது விளக்கி உள்ளார்.
Canva
கந்த சஷ்டி கவசத்தை ஒரு நாளைக்கு 36 முறை படிக்க வேண்டும். இதற்கு 7 மணி நேரம் ஆகும். நான் படித்துள்ளேன். ஆனால் கலியுகத்தில் ஒரு நாளைக்கு 36 முறை படிக்க நேரம் இருக்காது என்பதால் அதில் சூட்சமமாக ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது.
Canva
முருகனின் அருளால் நான் அதை தேடி தெரிந்து கொண்டேன் என்று கூறி அதை விளக்கி உள்ளார். சரவணபவ இது முருகனுக்கான மந்திரம் இதை 6 முறை சொல்ல வேண்டும்.
Canva
சரவணபவ, என்பதில் 'ச' என்ற எழுத்தை பின்னாடி போட்டல் ரவணபவச, 'ர' வை பின்னாடி போட்டால் வணபவசர, 'வ' வை பின்னாடி போட்டல் ணபவசரவ, 'ண' வை பின்னாடி போட்டால் பவசரவண, 'ப' வை எடுத்து பின்னால் போட்டால் வசரவணப, இது ஒவ்வென்றையும் 6 முறை சொன்னால் 6X6=36 வரும்.
Canva
இப்படி சொன்னால் 5 நிமிடத்தில் சொல்லி விடலாம் இப்படி சொல்லால் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை சொன்ன பலன் கிடைக்கும். என்றார்.
Canva
இது குறித்த வீட்டியோ தற்போது சமூக வலைதளங்களில் முருக பக்தர்களால் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடக் கூடாது! அப்படி செய்தால் என்ன நடக்கும்?