விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாட்டி வழிபாடு செய்வதன் வரலாறு குறித்து இங்கே காண்போம்

By Stalin Navaneethakrishnan
Jul 04, 2023

Hindustan Times
Tamil

இவருக்குப் பக்தர்கள் அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வார்கள். ஆனால் பலருக்கும் எதற்காக அருகம்புல் மாலை சாற்றுகிறார்கள் எனத் தெரியாது

சிவபெருமானின் மூத்த மகனான விநாயகர் பெருமான் பல்வேறு விதமான போர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அப்படி ஒரு போரில் ஈடுபட்டு அசுரனை அழிக்கும் போது தான் இந்த அருகம்புல்லின் வரலாறு உருவாக்கி உள்ளது

தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார் அனலாசுரன் என்று அசுரன். தன்னை எதிர்க்கக் கூடியவர்களை அனலாய் மாற்றி பொசுக்கு விடுவார். தேவர்கள் மற்றும் படைப்பு கடவுளான பிரம்மாவால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை

அனைவரும் சேர்ந்து சிவபெருமானைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். சிவபெருமான் விநாயகர் அழைத்து அந்த அசுரனை அழிக்கும் படி கட்டளையிட்டார்.

போருக்கு வந்த விநாயகர் பெருமானின் பூதகணங்களை அசுரன் எரித்து சாம்பலாக்கி விட்டார். விநாயகப் பெருமான் அசுரனோடு மோதினார்.

ஆனால் அசுரனை விநாயகரால் வெற்றி பெற முடியவில்லை. அதனால் அந்த அசுரனை விநாயகப் பெருமான் அப்படியே விழுங்கி விட்டார்.

வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் தன்னை வெப்பமடையச் செய்தான். அந்த வெப்பத்தை விநாயகரால் தாங்க முடியவில்லை.

குடம் குடமாகக் கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால் விநாயகரால் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை.

ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து விநாயகர் பெருமானின் தலை மேல் வைத்துள்ளார். உடனே அவரது எரிச்சல் அடங்கியுள்ளது. வயிற்றுக்குள் இருந்த அசுரன் ஜீரணமாகிவிட்டார்

அப்போது விநாயகர் பெருமான் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் எனப் பக்தர்களிடம் கேட்டுக் கொண்டார்

மே 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்