கங்கையில் குளிக்கும் போது எந்த காரியங்களை செய்ய கூடாது தெரியுமா?

By Pandeeswari Gurusamy
May 11, 2024

Hindustan Times
Tamil

சனாதன தர்மத்தில், நதிகள் தேவியின் வடிவமாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில் கங்கை அன்னைக்கு தனி இடம் உண்டு.

கங்கையில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் விசேஷ நாட்களில் கங்கையில் நீராட பக்தர்கள் குவிகின்றனர்.

கங்கையில் நீராடினால் உடல் வலிகள் மட்டுமின்றி மன வலியும் நீங்கும் என்பது நம்பிக்கை.

கங்கையில் நீராடும்போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

கங்கையில் குளிப்பதற்கு முன், கங்கா மாதாவை வணங்க வேண்டும் என்பது நம்பிக்கை.

கங்கையில் நீராடும்போது உடல் அழுக்குகளை ஆற்றில் கழுவக் கூடாது. சோப்பு மற்றும் ஷாம்பு பயன்படுத்தப்படக்கூடாது.

கங்கையில் குளித்த பின் உடலில் உள்ள தண்ணீரை துடைக்க வேண்டாம்.

கங்கையில் சிறுநீர் கழிக்கக் கூடாது. மேலும் மலத்தை வீச வேண்டாம்.

கங்கையில் துணி துவைப்பதும் பாவமாக கருதப்படுகிறது.

குப்பைகளை மட்டுமல்ல, மலர் மாலைகளையும் கங்கையில் வீசக்கூடாது.

இந்த தகவல் மத நம்பிக்கை மற்றும் பல்வேறு ஊடகங்களின் அடிப்படையிலானது.

தொற்றுகளை எதிர்த்து போராடும்