ஹெட்செட் அதிகம் பயன்படுத்துபவரா? அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன தெரியுமா? அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

By Stalin Navaneethakrishnan
Jul 24, 2023

Hindustan Times
Tamil

ஹெட்செட் அதிகம் பயன்படுத்துவதால் காதுக்கு மட்டும் பிரச்னை இல்லை. பிற உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது

குறிப்பாக கண், மூளை ஆகியவை ஹெட்செட் பயன்படுத்துவதால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன

ஹெட்செட் பயன்படுத்துவதில் முக்கியமானது தரம். விலை குறைவு என்பதற்காக ஏதாவது ஒரு ஹெட்செட் வாங்கி பயன்படுத்தக் கூடாது

ஹெ ட்செட் பயன்படுத்தும் போது 100% ஒலி அளவில் பயன்படுத்தக் கூடாது

அதிகபட்சம் 60% அளவிற்கு மேல் ஒலி வைத்து கேட்கக் கூடாது

மற்றவர்கள் பயன்படுத்திய ஹெட்செட்களை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. அது  நோய் பரப்பும்

தொடர்ச்சியாக ஹெட்செட் கேட்கக் கூடாது. சிறிது நேரம் இடைவெளி விட வேண்டும்

சாலையில் செல்லும் போது இரைச்சல் அதிகம் இருப்பதால் ஒலி அளவை அதிகரிக்கிறோம். அது உங்களுக்கே தெரியாமல் காதை பாதிக்கும்

ஹெட்செட் உங்கள் வசதிக்கானது, அதை தேவைக்கு மேல் பயன்படுத்த கூடாது

2025 ஆம் ஆண்டில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகள்