சுவையான வெள்ளைப்பூண்டு குழம்பு செய்வது எப்படி என அறிந்துகொள்வோமா?

By Marimuthu M
Apr 14, 2025

Hindustan Times
Tamil

வெள்ளைப்பூண்டு குழம்பு செய்யத்தேவையான பொருட்கள்:- வெள்ளைப்பூண்டு பற்கள் - 20, சின்ன வெங்காயம் - 15 பல்,  தக்காளி - 2,  அரைத்த தேங்காய் விழுது - அரை கப்,  மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்,  புளி - நெல்லிக்காய் அளவு, 

வெள்ளைப்பூண்டு குழம்பு செய்யத்தேவையான பொருட்கள்:- குழம்பு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்,  உப்பு - சிறிதளவு,  பெருங்காயம், உளுந்தம்பருப்பு - கால் ஸ்பூன்,  கறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு,  கடுகு - கால் ஸ்பூன் 

வெள்ளைப்பூண்டு குழம்பு செய்முறை: வெள்ளைப்பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உரித்து வைத்துக்கொள்ளவும். அதன்பின் தக்காளியை நறுக்கிவைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளியை சூடு நீரில் ஊறவைத்து வடிகட்டி எடுக்கவும். தேங்காயை அரைத்து தயார் செய்து  வைத்துக் கொள்ளவும். 

அடுப்பின்மேல் வாணலியை வைத்து அதனுள் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம், சேர்த்து தாளிக்கவும்.  பின், வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். 

பின் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளறிவிட்டு, அதன்மேல் புளி நீர் சேர்க்கவும். சிறிதுநேரம் கொதித்தபின், தேங்காய் விழுது சேர்க்கவும். 

நீர் போதுமான அளவு இருக்கிறதா என்று அறிந்து 20 நிமிடங்கள் வாணலியை மூடிவைத்து, அடுப்பில் கொதிக்கவிடவும். அதன்பின் சூடான சுவையான பூண்டு குழம்பு ரெடி!

குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் ராஜயோகத்தை பெற்ற ராசிகள்

Canva