வெயில் காலத்தில் மாதவிடாய் பிரச்சனையை ஈசியாக எதிர்கொள்வது எப்படி?

Pexels

By Pandeeswari Gurusamy
Mar 26, 2024

Hindustan Times
Tamil

கோடை காலத்தில் மாதவிடாய் ஏற்படும் போது அசௌகரியமாக இருக்கும். கடும் வெப்பம் மற்றும் வியர்வை ஏற்படும என்பதால் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்

Pexels

அதிக இரத்த் போக்கு உள்ள பெண்கள் ஒரே நேரத்தில் 2 பேட்களை அணிவார்கள். இவ்வாறு செய்வதால் ஆடைகளில் கறை படிவதைத் தடுக்கவும், ஓட்டத்தை கட்டுப்படுத்தவும் உதவும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது யோனி பகுதியில் தொற்றுநோயை அழைக்கும்.

Pexels

யோனி ஒரு சுய சுத்தம் செய்யும் உறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அந்த இடத்தைக் கழுவுவதற்கு வெதுவெதுப்பான நீரைத் தேர்ந்தெடுக்கவும். கூடுதலாக, தொற்றுநோயைத் தவிர்க்க 4-6 மணி நேரத்திற்குப் பிறகு உங்கள் பேடுகள் அல்லது டம்பான்களை தவறாமல் மாற்ற வேண்டும்.

Pexels

மாதவிடாய் சுகாதாரத்துடன், உங்கள் ஒட்டுமொத்த சுகாதாரத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். யோனி மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) பொதுவாக கோடையில் காணப்படுகின்றன. வியர்வையால் தோல் எரிச்சல், சொறி, சிவத்தல், அரிப்பு போன்றவை ஏற்படும்.

Pexels

ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிக்க முயற்சி செய்யுங்கள், நீண்ட நேரம் வியர்வையுடன் இருக்க வேண்டாம். சருமத்திற்கு உகந்த பருத்தி ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும்.

Pexels

வெளியில் செல்லும் போது டம்போன்கள் மற்றும் பேடுகளை அடிக்கடி மாற்றுவதற்கு எடுத்துச் செல்லுங்கள் 

Pexels

மாதவிடாய் காலங்களில் கடுமையான உடற்பயிற்சி செய்யாதீர்கள்.  எளிய உடற்பயிற்சி நடை பயிற்சி மேற்கொள்ளலாம்.

Pexels

மாதவிடாய் காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்துங்கள். உடலை நீரோட்டமாக வைத்துக்கொள்ள எப்போதும் முயற்சியுங்கள்

Pexels

மாதவிடாய் நாட்களில் சத்தான உணவை எடுத்துக்கொள்வதோடு போதுமான அளவு தூக்கத்தை உறுதி செய்யுங்கள்

Pexels

பூசணி விதை நன்மைகள்