பணப் பிரச்னை தீர பூசணிக்காய் விதை பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம் 

By Karthikeyan S
Aug 09, 2024

Hindustan Times
Tamil

பூசணிக்காய் தெய்வத்தின் மற்றொரு அம்சமாக பார்க்கப்படுகிறது. எதிர்வினைகளை அழிக்கவும் இதை சுற்றி உடைத்து திருஷ்டி கழிக்கவும் செய்கிறோம். குறிப்பாக பணப் பிரச்னை தீர பூசணிக்காய் பரிகாரம் மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது. 

முதலில் 7 பூசணி விதைகளை வலது உள்ளங்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையின் முன்பு கிழக்கு பார்த்தவாறு அமர்ந்த பிறகு, குலதெய்வத்தை மனமுறுகி வேண்டிக் கொள்ளுங்கள்.

பிறகு உங்களுக்கு இருக்கக்கூடிய பணப் பிரச்னை தீர வேண்டும் என்றால் முதல் முறை இந்த பரிகாரத்தை தொடங்குங்கள். உள்ளங்கையில் இருக்கும் பூசணி விதை அப்படியே இருக்கட்டும். 

தரையில் உட்கார்ந்து வேண்டுதலை ஆழ்மனதில் நம்பிக்கையோடு சொல்லுங்கள். 5 நிமிடம் வரை இந்த வேண்டுதலை இறைவன் முன்பு வைத்தால் போதும். பிறகு கையில் இருக்கும் அந்த விதைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வையுங்கள். 

7 நாட்கள் தொடர்ந்து இதே போல் வேண்டுதல் வைக்க வேண்டும். அதே ஏழு பூசணி விதைகளை எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு. தினமும் ஒரே நேரமாக இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். 

ஏழாவது நாள் காலை 6 மணிக்கு வேண்டுதலை சொல்லி முடித்துவிட்டு, கையில் இருக்கும் அந்த 7 பூசணி விதைகளை அப்படியே ஒரு பேப்பரில் வைத்து மடித்துக்கொண்டு போய் வேப்பமரம், வில்வமரம், வாழை மரத்தடியில் புதைத்து வைத்து விட்டு வர வேண்டும். 

7  நாட்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போதே பண பிரச்சனை தீர என்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ, அதை தீவிரமாக நீங்கள் செய்ய வேண்டும். அப்போது உங்கள் முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிட்டும்

தைப்பூசம் என்பது தை மாதத்தில் கொண்டாடப்படும் முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் அன்னை பார்வதி முருகனுக்கு வேல் வழங்கிய நாள் என கூறப்படுகிறது. மேலும் இந்த நாளில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்றாக  வரும் சிறப்பும் இதில் உள்ளது.

Pixabay