குடும்பப் பொறுப்பான ஆண், பெண்களிடம் இருக்கும்  குணங்கள் பற்றி தெரியுமா?

By Marimuthu M
Feb 29, 2024

Hindustan Times
Tamil

தன்னைப் பற்றி யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள். ஆனால், ஏக்கம் இருக்கலாம். ஒரு இலக்கை அடைய முயன்றுகொண்டே இருப்பார்கள்

ஆடம்பர வாழ்க்கையை வாழ மாட்டார்கள். எளிமையான தேவைக்கான வாழ்வினை வாழ்வார்கள்

இயல்பாகவே, ஒரு செலவு செய்யும்போது அதைச் சம்பாதிக்கும் போது ஏற்பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்ப்பார்கள்

பெரிய கூட்டத்தை நண்பர்களாக வைத்திருக்காமல், கஷ்ட நஷ்டங்களில் பங்கு எடுக்கும் நல்ல நண்பர்கள் நால்வரை எப்போதும் வைத்திருப்பார்கள்

எந்தவொரு செயலிலும் கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதே டாஸ்க் திரும்ப கிடைக்கும்போது திறம்பட நிர்வகிப்பார்கள்

சந்தோஷமாக இருக்க காசு, பணம் ஒரு பெரிய விஷயமில்லை, நாம் பார்க்கும் பார்வையில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்பதைப் புரிந்தவர்களாக இருப்பர்

மிக நேர்மையாக இருந்து முன்னேறாதபோது அடிக்கடி புலம்பித் தள்ளுவார்கள். அதன்பின், அவர்களே தன்னைத்தானே சமாதானப்படுத்தி கொண்டு மீண்டும் வாழ்க்கைப் போராட்டத்தைச்  சமாளிக்க முனைவார்கள் 

’ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?’ ஜோதிடர் சொல்லும் மாற்றுக் கருத்து!