தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் திருத்தலம் பற்றி அறிவோமா?
By Marimuthu M
Dec 17, 2024
Hindustan Times
Tamil
தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில், 'வீரபாண்டி’ என்னும் ஊரில், முல்லையாற்றங்கரையில் அருள்புரிகிறாள், அருள்மிகு கௌமாரி அம்மன்
பார்வை இழந்த வீரபாண்டியன் என்ற மன்னன் கனவில் சிவன் தோன்றி, கெளமாரியம்மனை வணங்கி சொல்கிறார். அதன்பின் மன்னன் இவ்விடம் வந்து பார்வை பெற்றதாக வரலாறு.
பார்வையைப் பெற்ற மன்னன் வீரபாண்டியன் கோயிலை புனரமைப்பு செய்ததாகக் கூறப்படுகிறது
முல்லைப் பெரியாறு அணைகட்டும் காலத்தில் ஆங்கிலேயே அதிகாரி ஒருவருக்கு அம்மை நோயில் இருந்து விடுபட அருள்புரிந்திருக்கிறாள், கெளமாரி.
அம்மை நோயில் இருந்து மீண்ட ஆங்கிலேயே அதிகாரி இங்கு கல்பாலம் கட்ட உத்தரவிட்டதாக செவி வழிச்செய்தியுண்டு.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடக்கும் திருவிழால் எண்ணற்றோர் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்
தேனி நகரில் இருந்து 8 கி.மீ பயணித்தால் வீரபாண்டி கெளமாரியம்மன் ஆலயத்தை அடையலாம்.
எடை இழப்பு
க்ளிக் செய்யவும்