உங்கள் போன் திருடப்பட்டால் நீங்கள் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்களை என்ன என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 26, 2025
Hindustan Times Tamil
உடனடியாக ஆன்லைனி மூலமாக அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்
மொபைல் எண், மொபல் போனின் ஐஎம்இஐ எண் போன்ற தேவையான தகவல்களை தவறாமல் கொடுக்க வேண்டும்
உங்களது போனை உடனடியாக பிளாக் செய்ய வேண்டும். இதன் மூலம் போனில் இடம்பிடித்திருக்கும் தனிப்பட்ட டேட்டாக்கள் தவறாக பயன்படுத்துவது தவிர்க்கப்படும்
மத்திய அரசின் CEIR (மத்திய உபகரண அடையாளப் பதிவு) அதிகாரப்பூர்வ இணையத்தளத்துக்கு சென்று, அங்கு இருக்கும் பார்மை நிரப்பி போனை பிளாக் செய்ய வேண்டும்
ஏனென்றால் உங்கள் போனில் இருக்கும் டேட்டாக்கள் தவறான நோக்கத்தில் பயன்படுத்துவோர் கைகளுக்கு செல்வதற்கு முன் டெலிட் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
உங்கள் பெர்சனல் டேட்டாவை டெலிட் செய்ய www.google.com/android/find சென்று உங்கள் இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு அடித்து உள்நுழைந்து, Setup Secure and Erase கிளிக் செய்து பெர்சனல் டேட்டா ஆப்ஷனை டெலிட் செய்து கொள்ளலாம்
ஐபோன் பயனாளர்கள் www.icloud.com/find சென்று ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டு அடித்து உள்நுழைந்து, Erase என்பதை டேப் செய்வதன் மூலம் டேட்டாக்களை டெலிட் செய்யலாம்
போன் டேட்டாக்களை போல் சிம் கார்டையும் உடனடியாக பிளாக் செய்ய வேண்டும்
உங்களது நெட்வொர்க் சர்வீஸ் வழங்குநரை தொடர்பு கொண்டு உங்கள் சிம் கார்டை டீஆக்டிவேட் செய்ய வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் போனில் எவ்வித பரிமாற்றமும், சாட்களும் போனை திருடியவர் மேற்கொள்ள முடியாது
உங்கள் சமூக வலைத்தளங்களின் பாஸ்வேர்டுகளை உடனடியாக மாற்ற வேண்டும். இதனால் அந்த கணக்குகள் பாதுகாக்கப்படும்
విజువల్ స్టోరీలను వీక్షించడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.
உங்கள் உறவு மோசமடைந்துள்ளது என்பதைக் காட்டும் 6 அறிகுறிகள்