நோயாளிகளிடம் செய்யக் கூடாதவை, செய்ய வேண்டியவை!

By Marimuthu M
Sep 18, 2024

Hindustan Times
Tamil

நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரிப்பது மனதளவில் அவர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கும்

நோயாளிகளிடம் நேரில் சென்று நலம் விசாரிக்கும்போது மிகவும் ஆறுதலான வார்த்தைகளை உதிப்பது அவர்களுக்கு மனபலத்தை அதிகரிக்கும். இதைச் செய்யலாம்

 நோயாளிகளிடம் நோயைப் பற்றி பேசுகையில், அது மிகவும் ஆபத்தான நோய் என்று அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசக் கூடாது.

நோயாளிகளின் ரிப்போர்ட்களைப் பார்த்து, தன் தனிப்பட்ட கருத்தை நோயாளிகளிடம் பயமுறுத்தும் வகையில் சொல்லக் கூடாது

நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்று விட்டு, மருத்துவ மனையைப் பற்றி குறை சொல்லக் கூடாது. இது அவர்களுக்கு உயிர்ப் பாதுகாப்பு இன்மையைக் கொடுத்துவிடும். 

நோயாளிகளைச் சந்திக்கச் செல்லும்போது மிகவும் ஆடம்பரமாக உடை அணிந்து, ஆபரணங்களை அணிந்து கொண்டு செல்லக்கூடாது. இது அவர்களுக்கு ஒருவித ஏக்கத்தைக் கொடுத்துவிடும். 

நோயாளிகள் படிக்கும் மனநிலையில் இருந்தால் தன்னம்பிக்கை தரும் நூல்களை வாசிக்கக்கொண்டு போய் கொடுப்பது நல்லது. 

எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் மீண்டு வந்து உற்சாகமாகப் பணியாற்றுவீர்கள் என்பதை நோயாளிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொல்லுங்கள். 

’வீடு, வாகனம், திருமணம் உறுதி!’ கன்னி ராசிக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!