குழந்தைகள் படிப்பில் படு சுட்டியாக வேண்டுமா? அவர்கள் செய்ய வேண்டியது என்ன?
By Priyadarshini R Feb 15, 2025
Hindustan Times Tamil
எனது கடுமையான முயற்சி வெற்றியைக் கொண்டுவரும் என்று உங்கள் குழந்தைகள் கூறவேண்டும். படிப்பதற்கு முயற்சி என்பது மிகவும் முக்கியமாகும். ஆனால் சில நேரங்களில் அதற்கு பதில் கிடைக்க நேரம் எடுத்துக்கொள்ளும்.
நான் எனது திறன்கள் மற்றும் என் மீது நம்பிக்கை கொள்கிறேன். தன்னை நம்புவது என்பது வெற்றிக்கு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த வார்த்தைகளை நீங்கள் கூறும்போது, அது உங்களுக்கு சுய சந்தேகம் இருந்தால் அதிலிருந்து வெளிவர உதவுகிறது.
நான் ஒழுங்காக இருக்கிறேன். மேலும் எனது நேரத்தை நான் சரியாகக் கையாள்வேன். நேர மேலாண்மை என்பது நன்றாக படிப்பதற்கு உதவும் சாவியாகும். இதை நீங்கள் தினமும் கூறவேண்டும்.
நான் படிக்கும்போது எந்த இடையூறுகளுக்கும் ஆளாக மாட்டேன். மாணவர்களுக்கு இடையூறுகள்தான் பெரிய சவாலாகும். இந்த வார்த்தைகளை அவர்கள் கூறும்போது, அவர்கள் படிக்கும்போது சமூக வலைதளம், இரைச்சல் மற்றும் தேவையற்ற சிந்தனைகளில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இந்த சிந்தனைகள் குழந்தைகளுக்குக் கொடுக்கும்.
சில நேரங்களில் எவ்வளவு படித்தும் குழந்தைகளுக்கு சில விஷயங்களை புரிந்துகொள்ள முடியாது. இதனால் அவர்கள், நான் ஒவ்வொரு நாளும் என்னை மேம்படுத்திக்கொள்கிறேன், என்ற வாசகத்தைக் கூறவேண்டும். இதனால், அவர்களுக்கு வளர்ச்சி மனநிலை ஏற்படும். இது அவர்களின் ஒவ்வொரு சிறிய அடியையும் அவர்கள் வளர்ச்சியை நோக்கி எடுத்துவைக்க உதவும்.
எப்போது உங்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதுபோல் உணர்ந்தாலும், நீங்கள் உடனே கூறிக்கொள்ளவேண்டியது ஒன்று மட்டும்தான். அது, நான் எப்போதும் எனது பாடங்களில் கவனம் செலுத்துகிறேன், என்பதுதான் அது.
நான் தினமும் புதிய விஷங்களை கற்றுக்கொள்வதில் மகிழ்கிறேன் என்ற வாசகம் உங்களுக்கு படிக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கும். இதனால் கல்வி சுமையாகாது. இதை நீங்கள் தினமும் கூறும்போது, அது உங்களின் மூளைக்கு பயிற்சி கொடுக்கிறது.
பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன