தீபாவளி பண்டிகை நாளில் அளவுக்கு அதிகமா சாப்பிட்டு வயிறு உப்புசம் போன்று உடல் உபாதைகள் வராமல் தடுக்கும் வழிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 30, 2024

Hindustan Times
Tamil

தீபாவளியை முன்னிட்டு வீட்டில்  விதிவிதமாக பலகாரங்கள் செய்வதுண்டு. இனிப்பு, காரம் என பல்வேறு வகையான பலகாரம் அளவுக்கு மீறு சாப்பிட்டால் வயிறு உப்புசம் போன்ற உடல் நல பாதிப்பு ஏற்படலாம

விருப்பமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க முடியாது என்றாலும் போதிய அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். அத்துடன் உடலில் அதிகப்படியான சோடியம் தங்குவது வெளியேறும்

தீபாவளி பலகாரங்கள் சுவைக்காக உப்பு, காரம் போன்றவை அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும். இதன் விளைவாக உடலில் உப்பு சத்து அதிகரித்து வயிறு உப்புசம் ஏற்படலாம். இதை தவிர்க்க துளசி, மிளகு போன்றவற்றை பயன்படுத்தலாம்

உருளை, அரிசி, பிரட் போன்ற ஸ்டார்ச் மற்றும் கார்ப்போஹைட்ரேட்கள் நிறைந்த உணவுகள் அதிகமாக சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு உயரக்கூடும். எனவே ஆற்றல் அளவை பராமரிக்க காய்கறிி மற்றும் முழு தானியங்களை சாப்பிடலாம்

ஃப்ரஷ்ஷான, குறைவான க்ளைசெமிக் குறியீடு கொண்ட ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்கள் சாப்பிடலாம். நன்கு சாப்பிட்ட பின் காய்கறி ஜூஸ்கலை பருகி உடலிலுள்ள நச்சுக்களை நீக்க முயற்சிக்கலாம்

யோகர்ட், தயிர் போன்ற ப்ரோபயோடிக் போன்ற குடல் ஆரோக்கியத்துக்கு ஆதரவு தரும் உணவுகள் சாப்பிட்டு செரிமானத்தை மேம்படுத்தலாம். வயிறு உப்புசம் ஆவதும் குறையும்

இனிப்பு சாப்பிடுவதை யாராலும் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது என்றாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதோடு ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்து சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆற்றலை கூட உறிஞ்சிவிடும். எனவே இனிப்புகள் மிதமான அளவில் சாப்பிடுங்கள்

பண்டிகை நாள் என்பதால் குடும்பத்தினர், நண்பர்களுடன் ரிலாக்ஸ் ஆக இருக்க எண்ண வழக்கமான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டாம். குறைந்தபட்சம் உடல் செயல்பாட்டையாவது வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலம் மந்தமான உணர்வு ஏற்படாமல் இருப்பதோடு வயிறு உப்புசம் ஆகாமலும் பார்த்து கொள்ளலாம்

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதை தவிர்த்து நல்ல, ஆழந்த தூக்கத்தை பெற முயற்சி செய்யுங்கள். ஊட்டச்சத்து மிகுந்து உணவுகளை சாப்பிடுவதன் மூலம் புத்துணர்வாக உணரலாம்

உடல் எடை அதிகரிக்க விரும்பாமலும், எடை இழப்பு முயற்சியிலும் ஈடுபடுபவர்களாக இருப்பீர்களானால் குளிர்காலத்தில் நீங்கள் எந்த பழங்களை அதிகம் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்