ஆட்டு இறைச்சியில் இப்படி ஒரு பிரச்னை இருக்கா?

By Stalin Navaneethakrishnan
Nov 01, 2023

Hindustan Times
Tamil

ஆட்டுக்கறி சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் ஒரு பெரிய நோய் உடலில் வேரூன்றிவிடும். சமீபத்தில் ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

பண்டிகை என்றாலே பலர் ஆட்டுக்கறியை தவறாமல் சாப்பிடுவார்கள். காரணம் அதன் சுவை!

ஆனால் இந்த இறைச்சி ஆபத்தை ஏற்படுத்தும். என்று ஒரு சமீபத்திய ஆய்வு காட்டுகிறது

சிவப்பு இறைச்சி (அதாவது ஆட்டுக்குட்டி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி) பற்றிய பெரிய அளவிலான ஆய்வு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் T.H. சான் பொது சுகாதார பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் 216695 பேர் சேர்ந்துள்ளனர்.

இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களின் உணவுப் பழக்கம் குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது.

இதன் மூலம் 36 வருடங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்தத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில், ஒரு கொடிய நோய் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நோயால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் இறக்கின்றனர்

நீரிழிவு நோய். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு வாரமும் சிவப்பு இறைச்சி சாப்பிடும் பழக்கம் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். வாரம் இருமுறை இறைச்சி சாப்பிடுவது இந்த நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 36 ஆண்டுகளில் 22 ஆயிரம் பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரெட் மீட் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு பொது மக்களை விட 62 சதவீதம் அதிகம்.

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்