இயக்குநர் வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இணைந்த கதையை, கடந்த 10 வருடங்களுக்கு முன்பு புதுயுகம் சேனலுக்கு பகிர்ந்து இருந்தார். அந்த கதையை இங்கே பார்க்கலாம். 

By Kalyani Pandiyan S
Nov 28, 2024

Hindustan Times
Tamil

கல்லூரியில் கவர்ந்த பேச்சு இது குறித்து அவர் பேசும் போது, “அப்போது இளங்கலை படித்து முடித்துவிட்டு, முதுகலை படிப்புக்குள் நுழைந்து இருந்தேன். அப்போது நான் படித்த கல்லூரியில், பாலு மகேந்திரா விசிட்டிங் பேராசிரியராக இருந்தார். 

அவர், இரண்டு நாட்கள் ஒர்க்க்ஷாப் ஒன்றை நடத்தினார். அப்போது அவர் பேசிய விஷயங்கள், சினிமாவை விளக்கிய விதம் உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. 

இதனையடுத்து நான் கல்லூரியில் இருந்த ஃபாதர் ராஜ நாயகம் அவர்களிடம் சென்று, பாலுமகேந்திரா சாரிடம் நான் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி என்னுடைய ஆசையை வெளிப்படுத்தினேன். அவரும், பாலு மகேந்திராவும் என்னிடம் தமிழ் நன்றாகத் தெரிந்த ஒரு பையன் வேண்டும் என்று கேட்டு இருந்தார் என்று சொன்னார்.  

இதனையடுத்து நான் அவருடைய பரிந்துரையின் பெயரில், பாலு மகேந்திராவை சென்று சந்திக்கச் சென்றேன். அப்போது அவரின் அலுவலகமானது சாலிகிராமத்தில் இருந்தது. அந்த அலுவலகத்தில் வெளியே நின்று யார் பார்த்தாலும், உள்ளே பாலு மகேந்திரா சார் இருப்பது தெளிவாக தெரியும். 

இதைடுத்து அன்றைய தினம் சென்ற நான், வெளியே நின்று எக்ஸ்கியூஸ் மீ ஃபாதர் ராஜநாயகம்… என்று சொல்லியதுதான் மிச்சம்…பாலு மகேந்திரா யாரப்பா நீ…சென்று விட்டு நாளை வா என்று கூறிவிட்டார். இதையடுத்து நாம் நம்மை வெளிப்படுத்திய விதம் சரியில்லையோ என்று நினைத்துக் கொண்டு வந்து விட்டேன்.

இதையடுத்து அடுத்த நாள் சென்று பணிவுடன் எக்ஸ்கியூஸ் மீ சார் என்றேன். என்னை அவர் உள்ளே வர சொன்னார். ஃபாதர் ராஜநாயகம் உன்னை என்ன சொல்லி அனுப்பி வைத்தார் என்று கேட்டார். அப்போது நீங்கள் தமிழ் தெரிந்த ஒருவரை கேட்டதாக சொன்னார் என்றேன். 

இதையடுத்து அவர் நான் தமிழ் தெரிந்த பையனை கேட்கவில்லையே..நன்றாக தமிழ் இலக்கியம் தெரிந்த பையனைத்தானே கேட்டேன் என்று சொல்லி,  கிளம்பு என்று சொல்லிவிட்டார். அதனைத் தொடர்ந்து நான் இல்லை சார்…நீங்கள் சொல்லுங்கள் நான் படிக்கிறேன் என்று சொன்னேன்.

தொடர்ந்து, அவர் எனக்கு பிடித்த மூன்று புத்தகங்கள்,மூன்று படங்களை கேட்டார். நான் சொன்னேன்.அவருக்கு பிடித்த படங்கள் மற்றும் புத்தகங்களில் நான் சொன்னவை இருந்தன. இதையடுத்து அவர் எனக்கு தமிழ் எழுத்தாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை கொடுத்து, அவர்களின் புத்தகங்களை படிக்கச் சொன்னார்

நான் படித்தேன். ஒரு வாரம் கழித்து நான் அவருக்கு போன் செய்தேன். அப்போதுதான் என்ன ஒரு உதவி இயக்குநர் என்றால் தினமும் அலுவலகம் வரவேண்டும் என்ற பொறுப்பு வேண்டாமா என்று சாடினார். அப்போதுதான் நான் அவரிடம் உதவி இயக்குவதாக சேர்ந்து விட்டேன் என்று உறுதி செய்தேன்” என்று பேசினார்.

மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள்