கோட் படம் குறித்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “இந்தப்படம் எனக்கு மறக்க முடியாத பயணம் என்று சொல்லலாம். இந்தப் படம் எப்படி ஆரம்பித்து, எப்படி முடிந்தது என்றே தெரியவில்லை. இந்தப் இடத்தில், நான் அர்ச்சனாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். காரணம் என்னவென்றால், இந்தக் கதையை முதலில் நான் அர்ச்சனாவிடம் தான் கூறினேன்.

By Kalyani Pandiyan S
Aug 18, 2024

Hindustan Times
Tamil

இந்தக்கதையை எப்படி செய்யலாம் என்று நானும் அவரும்தான் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் தான் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் மூலமாக விஜய் சாரின் அப்பாயிண்ட்மெண்ட் எனக்கு கிடைத்தது. 

அந்த அப்பாயிண்ட்மெண்டில்தான் நான் அவரிடம் இந்தக் கதையை கூறினேன். கதை அவருக்கு பிடித்து விட ஏஜிஎஸ் நிறுவனமும், விஜயும் கைகோர்த்து விட்டார்கள்.  

இரண்டு பேரும் கைகோர்த்து விட்டதால், பட்ஜெட் பற்றி பிரச்சினையே இல்லாமல் ஆகி விட்டது. என்ன வேண்டும் என்றாலும் யோசிக்கலாம் என்பது போல சூழ்நிலை மாறிவிட்டது. நாங்கள் படம் ஆரம்பித்ததே அமெரிக்காவில்தான்.இந்தப் படத்திற்காக அவ்வளவு நாடுகளுக்கு நாங்கள் பயணப்பட்டு இருக்கிறோம்.

ஆனால் சூழ்நிலை ரஷ்யாவில் தான் எங்களுக்கு சரி வர அமைந்தது. அதனால் அங்கு படப்பிடிப்பை நடத்தினோம். ரஷ்ய போர் பிரச்சினை நடந்து கொண்டிருந்த போதுதான் அங்கு சென்று நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அதை எங்களால் மறக்கவே முடியாது. இந்த மாதிரியான தயாரிப்பாளர் கிடைக்கும் பொழுதுதான் எங்களால் அப்படி யோசித்து படம் எடுக்க முடியும்" என்று பேசினார். 

மாரடைப்பை தடுக்கும் நட்ஸ்