இயக்குநர் சுந்தர் சி அண்மையில் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில், குஷ்பு உடனான எமோஷனலான தருணத்தை பற்றி பேசி இருக்கிறார். Enter text Here
By Kalyani Pandiyan S May 31, 2024
Hindustan Times Tamil
ஒரு கட்டத்தில்மாறி சண்டை போட்டுக் கொண்டே இருந்து, உனக்கு நீ எனக்கு நான் என்று முடிவாகிவிட்டது. கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டோம். பிப்ரவரி 27ஆம் தேதி கல்யாணம் செய்ய முடிவெடுத்தோம். மார்ச் 9ஆம் தேதி கல்யாணம் செய்து கொண்டோம். கல்யாணத்திற்கு மொத்தமாகவே 50 பத்திரிகைகள் தான் அடித்தோம். கல்யாண பத்திரிகையில், முகூர்த்த நேரத்தை 45 நிமிடம் முன்னதாகவே பதிவிட்டு விட்டார்கள்.
என்னுடைய வாழ்க்கையில் எனக்கு மறக்க முடியாத சம்பவம் என்றால், அது என்னுடைய முதல் குழந்தை பிறந்ததுதான். அது என்னை விட குஷ்புவுக்கு மிக மிக எமோஷனல் ஆன தருணம். காரணம் என்னவென்றால், குஷ்புவுக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து அவரை பரிசோதித்த டாக்டர் ஒருவர், அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்.
கல்யாணத்திற்கு முன்னதாக அவர் அப்படி சொன்னவுடன், குஷ்புவிற்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. இதை என்னிடம் வந்து சொல்லி, நீங்கள் வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். ஆனால் எனக்கு அதில் உடன் பாடில்லை.
இதையடுத்து நாங்கள் இருவரும் நமக்கு குழந்தை கிடையாது என்று மனதில் பிக்ஸ் செய்து கொண்டு கல்யாணம் செய்து கொண்டோம். ஆனால் கடவுள் வேறு திட்டம் வைத்திருந்தார். எங்களுக்கு தேவதைகள் போல இரண்டு குழந்தைகள் பிறந்தன.” என்று பேசினார்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் குடிக்க வேண்டும் பாருங்க!