இதையடுத்து, சிக்கு புக்கு ரயில் பாடலுக்கான சிச்சு வேஷனை அவரிடம் விளக்கினேன். அந்த பாடலை, கானா பாடலாக நானே பாடி காண்பித்து, அதனை ட்ரெயினில் பாடும் வகையில், ரிதம் போட்டு இசை அமைத்துக் கொடுங்கள் என்று கேட்டேன். இரண்டாவது நாளோ, மூன்றாவது நாளோ அவர் என்னை அழைத்தார். நான் ரயில் போன்ற ரிதம் வேண்டும் என்று கேட்டதால், அவர் அப்படியான ஒரு ரிதமை அமைத்து, அதில் ஒரு பீசை எனக்கு போட்டு காட்டினார். அப்போது, அவரது ஸ்டுடியோ மிக மிக சிறியது.