2010ஆம் ஆண்டு தமிழ் திரையுலகினர் சார்பில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த அந்த விழாவில், பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்தனர்.
By Kalyani Pandiyan S Jul 27, 2024
Hindustan Times Tamil
ஆனால், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அஜித்குமார் தன்னை நிகழ்ச்சிக்கு வற்புறுத்தி அழைத்ததாக குறிப்பிட்டு, மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். இதனை பாராட்டும் வகையில், ரஜினி எழுந்து நின்று கைதட்டினார். இது மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னர் அஜித் கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டதையடுத்து, அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து அந்த நிகழ்ச்சியை இயக்கிய இயக்குநர் செல்வமணி தமிழ் நாடு நவ் சேனலுக்கு கடந்த வருடங்களுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “அவருக்கும், எனக்கும் ஒரு நிகழ்ச்சியில் மனஸ்தாபம் ஏற்பட்டது. அது கலைஞருக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில், அஜித் மேடையில் அவரை, அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வற்புறுத்தி அழைத்ததாக, கொந்தளித்து பேசி இருந்தார். உண்மையில், நாங்கள் அவரை அந்த நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி எந்த வற்புறுத்தலும் செய்யவில்லை.
அப்போது நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தில்தான் அவர் படங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது விநியோகஸ்தர்களுக்கும் அஜித்திற்கும் ஏதோ பிரச்சினை என்று செய்தி இருந்தது. அப்போது, விநியோகஸ்தர்கள் அவருக்கு ரெட் கார்டு போட்டிருந்தார்கள்.
அந்தக் கோபத்தைதான் அஜித் அந்த மேடையில் காண்பித்தார். அப்போது, கவுன்சில் சார்பாக சில நடவடிக்கைகளை அவர் மீது எடுத்தோம். அதில் அவருக்கு என் மீது வருத்தம் இருந்தது.” என்று பேசினார்.
அதிக உப்பு சாப்பிட்டால் ஆபத்துதா.. ஆனா உப்பை தவிர்ப்பதால் என்ன ஆபத்து பாருங்க!