திருப்பாச்சி படத்தில் இடம் பெற்ற அந்த காமெடி சீனில், விஜய்க்கு பின்னால் பெஞ்சமின் நின்றாரே, அந்த இடத்தில்தான் முதலில் விஜய் நிற்பதாக இருந்தது. பெஞ்சமின்தான் மரக்கட்டையில் படுப்பது போன்று காட்சி இருந்தது. அந்த நாள் அந்த காட்சியை ஷூட் செய்வதற்கு வழக்கம் போல  நானும், விஜய் சாரும் காட்சி பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது விஜய் மாலையை என் மீது போட்டு வெட்டுவது போல காட்சியை மாற்றலாமா? என்று மிகவும் பணிவாக கேட்டார். 

By Kalyani Pandiyan S
Jun 11, 2024

Hindustan Times
Tamil

எனக்கும் அவர் அப்படி சொன்னவுடன் ரஜினி சார்தான் ஞாபகம் வந்தார். ஆக்க்ஷன் ஹீரோவாக வளரும் ஒரு நடிகர், திடீரென்று காமெடி செய்தால், அதை மக்கள் வெகுவாக ரசிப்பார்கள். அதை ரஜினி சார் பல படங்களில் செய்திருக்கிறார்.

அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. ஆகையால் இது வொர்க் அவுட் ஆகும் என்று தோன்றியது. ஆனாலும் நான் விஜய் சாரிடம், நீங்கள் பெரிய மாஸ் ஹீரோ, திடீரென்று இப்படியான ஒரு காட்சியில் நடிப்பதற்கு உடன்பாடு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். 

அவரோ, எனக்கு ஓகே தான் உங்களுக்கு ஓகே என்றால் எடுக்கலாம் என்றார். அப்படித்தான் அந்தக்காட்சியை விஜய் சாருக்கு நான் வைத்தேன். அந்த காட்சி எடுத்த சமயத்தில், ஜெயலலிதா ஆடு மாடுகளை வெட்டக்கூடாது என்ற சட்டம் இயற்றியிருந்தார். ஆனால், அதை விஜய் சார் என்னிடம் பெரிதாக கேட்டுக் கொள்ளவில்லை.

அதை நகைச்சுவை காட்சி என்பதற்காக கண்டுகொள்ளாமல் சென்று விட்டார். 

அந்தக்காட்சியை நாங்கள் கொஞ்சம் சீரியஸாக எடுத்து இருந்தால், அரசாங்கம் எங்கள் மீது கோபம் கொண்டு, பிரச்சினை வந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அப்படி ஆகவில்லை. சில சீரியஸான காட்சிகளை இப்படி நகைச்சுவையாக கையாண்டால் பிரச்சினை வராது” என்று பேசினார். 

அமிலத்தன்மையை சீராக்கும் உணவுகள்