நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை வர வாய்ப்புள்ளவர்கள்; இந்த டின்னர் சாப்பிடுங்க
By Priyadarshini R Apr 12, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – ஒரு கப்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
நெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
புதினா – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பிரியாணி மசாலா – கால் ஸ்பூன்
உருளைக்கிழங்கு – கால் கப்
பச்சை பட்டாணி – கால் கப்
கேரட் – கால் கப்
பீன்ஸ் – கால் கப்
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் கோதுமை ரவையை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். வறுத்து அதை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவேண்டும்.
அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து பெரிய வெங்காயம் மற்றும் புதினா சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். இஞ்சி-பூண்டு விழுதில் பச்சை வாசம் போகவேண்டும்.
அடுத்து மஞ்சள் தூள், பிரியாணி மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதகக்வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து நல்ல குழையும் அளவுக்கு மசித்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அனைத்தும் வதங்கியவுடன் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். அனைத்தும் கொதித்து, காய்கறிகள் வெந்து வந்தவுடன், கோதுமை ரவையை சேர்த்து கிளறவேண்டும். அது வெந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான கோதுமை ரவை கிச்சடி தயார்.
லைகா நிறுவனத்தின் அதிகாரி ஜி கே தமிழ் குமரன் டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.