ராயன் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சு! போயஸ் கார்டனின் வீடு... இந்த வீடு இவ்வளவு பெரிய சர்ச்சையாக, பேச்சாக எழும் என்று தெரிந்திருந்தால், நான் அங்கு வீடு கட்டிருக்கவே மாட்டேன். நான் யாருடைய ரசிகர் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். ரஜினி சாரின் வீடானது போயஸ் கார்டனில் இருக்கிறது. Photo credit - sun pictures 

By Kalyani Pandiyan S
Jul 08, 2024

Hindustan Times
Tamil

எனக்கு 16 வயது இருந்த போது ஒரு நாள் போயஸ் கார்டன் தெருவுக்கு சென்றேன். அப்போது அங்கு இருந்த ரஜினியின் வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆசைப்பட்டேன்.  Photo credit - sun pictures 

அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் கெஞ்சி அனுமதி வாங்கி, அவர் வீட்டையும் வீட்டையும் சென்று பார்த்தேன். அதற்கு பக்கத்திலேயே முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் வீடும் இருந்தது. Photo credit - sun pictures  

அதைப் பார்த்த பொழுது, எப்படியாவது நாமும் இந்த போயஸ் கார்டனில், ஒரு சின்ன வீட்டையாவது கட்டிவிட வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த விதை அப்போது விழுந்தது.  Photo credit - sun pictures 

அந்த பதினாறு வயது வெங்கடேஷ் பிரபுவின் ஆசைக்கு, தனுஷ் கொடுத்த கிப்ட் தான் நான் இப்போது போயஸ் கார்டனில் கட்டி இருக்கும் வீடு..  Photo credit - sun pictures 

நான் யார் என்பது அந்த சிவனுக்கு தெரியும்... என்னுடைய அம்மா அப்பாவுக்கு தெரியும்... எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.. என் மனசாட்சி பேச ஆரம்பித்தால் அது ஆபத்தில் முடிந்துவிடும். " என்று பேசினார். Photo credit - sun pictures 

சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் நெய் சாப்பிடலாமா?