தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது.
By Suguna Devi P Nov 26, 2024
Hindustan Times Tamil
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
Enter text Here
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று புயலாக மாறியுள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த புயலுக்கு ஃபெங்கல் எனும் பெயர் வைக்குமாறு சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது
தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கைக்கு அருகில் இருந்து நகர்ந்து வருகிறது .
சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 800 கி. மீ தொலைவில் இருந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. இது இன்று அல்லது நாளை வலுப்பெற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலால் கனமழை வரும் பட்சத்தில் உதவி புரிய தேசிய பேரிடர் மேலாண்மை மையம் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது?