கருவளையம் பற்றி கவலைப்பட வேண்டாம், பார்லர் போக தேவையே இல்ல..  இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்

freepik

By Pandeeswari Gurusamy
Oct 19, 2024

Hindustan Times
Tamil

கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் சோர்வு அல்லது வயதானதால் ஏற்படலாம். இதற்கு தீர்வு காண உதவும் எளிய வீட்டு வைத்தியம்.

freepik

சோர்வு மற்றும் தூக்கமின்மை கண்களுக்குக் கீழே கருமையை ஏற்படுத்தும். ஒவ்வொரு இரவு 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் அவசியம்.

freepik

வெள்ளரிக்காய்: ஒரு வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் 10 நிமிடம் வைத்திருந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். மேலும், இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

freepik

ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கண்களை மூடி உட்காரவும். வீக்கம், கருவளையங்களை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

freepik

பாதாம் எண்ணெய்: வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், படுக்கைக்குச் செல்லும் முன் கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

freepik

அலோ வேரா ஜெல்: இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் கருவளையங்களை குறைக்கிறது. இது ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.

freepik

தேங்காய் எண்ணெய்: இது ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர், தேங்காய் எண்ணெயை கருவளையங்களில் தடவி இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

freepik

சமையலறையில் அழுக்கு படிந்து இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன் சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்