கோடை வெயிலின் கொடுமையில் இருந்து உடலின் வெப்பநிலையை சீராக்க குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும். அதற்கு சிறந்த தேர்வு தயிர் சாதம் தான் .
By Suguna Devi P May 05, 2025
Hindustan Times Tamil
தயிர் சாதம் செய்வது எளிமையான விஷயம் என்றாலும், சிலருக்கு பக்குவமாக செய்யத் தெரியாது. வீட்டிலேயே எளிமையாக தயிர் சாதம் செய்யும் முறையை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
1 கப் தயிர்
அரை கப் சாதம்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
அரை டீஸ்பூன் சீரகம்
கஅரை டீஸ்பூன் டுகு
2 வற மிளகாய்
3 பச்சை மிளகாய்
1 துண்டு இஞ்சி
ஒரு கொத்து கறிவேப்பிலை
அரை டீஸ்பூன் பொடித்த மிளகு
அரை டீஸ்பூன் பெருங்காய தூள்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
கொத்தமல்லி இலை நறுக்கியது
முதலில் தயிரை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து சாதத்தை மசித்து கொள்ளவும். பின்பு மசித்த சாதத்துடன் அடித்த தயிரை சேர்த்து கலந்து விடவும்.
தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பொடித்த மிளகு, பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தயிர் கலந்த சாதத்துடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். சுவையான கோயில் ஸ்டைல் தயிர் சாதம் தயார்.
இந்த தயிர் சாதத்தை காலையிலும், மதியமும் என எப்போதும் சாப்பிடலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!