சர்க்கரை நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மல்லி விதை!
Pexels
By Pandeeswari Gurusamy Apr 14, 2024
Hindustan Times Tamil
வரமல்லியில் இரும்பு ட்டாசியம் மற்றும் சில முக்கிய மினரல்களுடன் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது வரமல்லி. நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் நிறைந்தது. வரமல்லியின் சத்துக்கள் முழுவதும் கிடைக்க வேண்டுமெனில் அதை ஊறவைத்த தண்ணீரை பருகும்போதுதான் கிடைக்கும்.
Pexels
வரமல்லி என்பது இந்திய சமையலறையில் கட்டாயம் இடம்பெறும் ஒன்று. இது இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்துப்படுகிறது. இதை ஊறவைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஓரிரவு ஊறவைக்கும்போது அதன் சத்துக்கள் அனைத்தும் இறங்கிவிடும்.
Pexels
வரமல்லி விதை தைராய்டு பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது. ஓரிரவு ஊறிய வரமல்லி தண்ணீரை முதலில் வெறும் வயிற்றில் காலை எழுந்தவுடன் பருகிவிடவேண்டும். ஹார்மோன் பிரச்னைகளால் தைராய்டு பிரச்னைகள் ஏற்படுகிறது. வாதம் மற்றும் கபம் சமமின்மையால் தைராய்டு பிரச்னைகள் ஏற்படுகிறது. அதை இந்த வரமல்லி சரிசெய்கிறது.
pixa bay
வரமல்லி செரிமானத்தை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வரமல்லி விதைகள் வாயுத்தொல்லைகளை நீக்கும். வயிறு உப்புசம் குறையும். குடல் ஆரோக்கியம் மேம்படும்.
pixa bay
சில ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரை, வரமல்லி விதைகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் ஹைப்போகிளைசெமிக் உட்பொருட்கள் உள்ளது. இது நீரிழிவு நோய்யை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இதை ஊறவைத்து அதன் தண்ணீரை பருகுவதை வழக்கமாகக்கொள்ள வேண்டும்.
pixa bay
பெண்களின் மாத விடாய் பிரச்னைகளுடன் தொடர்புடைய கோளாறுகளையும், அசவுகர்யங்களையும் சரிசெய்ய வரமல்லி உதவுகிறது. மாதவிடாய் காலங்களில், வரமல்லி விதைகளை ஊறவைத்த தண்ணீரை பருகும்போது, அது உங்கள் வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கிறது. மாதவிடாய் வயிற்று வலியையும் போக்குகிறது.
வரமல்லி விதைகள் உங்கள் மனதை இயற்கை முறையில் அமைதிப்படுத்தும். டென்சனை குறைத்து மன அமைதியை அதிகரிக்கிறது. பயம் மற்றும் பதற்றத்தை போக்குகிறது.
Pexels
மணமணக்கும் ஐயங்கார் வீட்டு ஸ்டைல் புளியோதரை பொடி.. நாக்கில் எச்சில் ஊறும் டேஸ்தா