Cooking Tips : மெழுகுவர்த்திகள் அதிக நேரம் எரிய வேண்டுமா? பாகற்காய் பழுக்காமல் இருக்க என்ன செய்வது? – இதோ பல டிப்ஸ்!

By Priyadarshini R
Feb 27, 2024

Hindustan Times
Tamil

மெழுகுவர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

மிக்ஸியில் சட்னி மசாலா போன்றவற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விட்டு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.

எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்