தோசை கல்லை சுத்தம் செய்து கிழியாமல் கிரிஸ்பியா தோசை ஊற்றுவது எப்படி பாருங்க!
Canva
By Pandeeswari Gurusamy Mar 13, 2025
Hindustan Times Tamil
நீங்கள் சுடும் தோசை அடுப்பில் ஒட்டிக்கொண்டு அடிக்கடி கிழிந்து விடுகிறதா.. அப்ப இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க.
Canva
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். பின்னர் அதில் சிறிது தண்ணீர் ஏற்றி , உப்பு, எலுமிச்சை சேர்த்து நன்றாக தேய்க வேண்டும். நீங்கள் விரும்பினால் வினிகரையும் பயன்படுத்தலாம்.
Canva
பிறகு தோசை கல்லை கழுவி விட்டு அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். இப்போது வெங்காயத்தை பயன்படுத்த வேண்டும்.
Canva
தேசை கல்லில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். வெங்காயத்தை பாதியாக நறுக்க வேண்டும். நறுக்கிய பக்கத்தை தோசைக்கல்லில் இருக்கும் எண்ணெய் மேல் தடவி விட வேண்டும். கல்லில் அனைத்து பகுதியிலும் படும் படி தேய்க்க வேண்டும்.
Canva
வெங்காயத்திற்கு பதிலாக கத்தரிக்காயையும் பாதியாக நறுக்கி பயன்படுத்தலாம்.
Canva
இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து வழக்கம் போல் மாவை கல்லில் ஊற்றி தேய்க்க வேண்டும். பின்னர் தோசைக்கு தேவையான எண்ணெய் ஊற்றி நன்றாக வேக விட வேண்டும்.
Canva
பின்னர் தோசையை இலாவகமாக பிரட்டி வேக விட்டு எடுத்தால் அவ்வளவு தான் ருசியான தோசை ரெடி
Canva
மிளகாய் அதிகம் சாப்பிடுபவரா நீங்க..இத கவனிங்க.. எத்தனை பிரச்சனைகள் வரும் பாருங்க!