Cooking: உங்கள் சமையலை மேலும் ருசியாக்க உதவும் சூப்பர் டிப்ஸ்

By Pandeeswari Gurusamy
Jul 11, 2024

Hindustan Times
Tamil

இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும் சூப்பரான சில சமையல் குறிப்புகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

pixa bay

ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்த்து இட்லி மாவு அரைத்தால், மாவு சீக்கிரம் புளிக்காமல் நன்றாக இருக்கும்.

Pexels

அடை மாவு அரைக்கும் போது, அரை கப் சிறு பயிறு, கால் கப் வேர்க்கடலை சேர்த்து செய்தால் ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் சத்தாகவும் இருக்கும்.

சிறிதளவு நெய்யில், கடுகுடன், ஐந்து முழு மிளகை சேர்த்து தாளித்தால், ரசம் நல்ல மணத்துடன் இருக்கும்.

தயிர் வடைக்கு, உளுந்தம் பருப்புடன், ஆறு முந்திரி பருப்பை சேர்த்து ஊறவைத்து அரக்கவும். இந்த மாவில் வடை செய்தால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

பன்னீர் பட்டர் மசாலா செய்யும் போது இஞ்சி, வெங்காய விழுதை நன்றாக கிளறியதும், முந்திரி, கசகசா தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்த விழுதை கலந்து செய்தால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.

பிரிஜ்ஜில் உள்ள ஐஸ் கியூப் டிரேயில், ஏதாவதொரு பழச்சாறை ஊற்றி, கட்டியானவுடன் குழந்தைகளுக்கு ஜூசுடன் கலந்து கொடுத்தால் அவர்கள் விரும்பி குடிப்பார்கள்.

Pexels

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் குடிக்க வேண்டும் பாருங்க!