மழை நேரத்தில் தொற்று பரவல் என்பது அதிகமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு எளிதாக ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 15, 2024

Hindustan Times
Tamil

மழை காலங்களில் பொதுவாக ஏற்படும் கூடும் உடல் நல பாதிப்புகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம் 

தொற்று மூலமாக ஏற்படும் பாதிப்பாக டைப்பாய்டு காய்ச்சல் இருந்து வருகிறது. உணவு, தண்ணீரில் ஏற்படும் தொற்று காரணமாக இவை ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, தலைவலி, வயிற்று வலி, தடிப்புகள் மற்றும் வீக்கம் ஆகியவை டைபாய்டின் ஆரம்ப தொடக்கத்தைக் குறிக்கிறது

மழை நேரத்தில் பாக்டீரியா, கிருமிகள், வைரஸ்கள் மற்றும் கொசுக்கள் போன்ற நோய்க்கிருமிகள் டெங்கு மற்றும் மலேரியா பாதிப்பை உருவாக்குகின்றன. சோர்வு, குமட்டல், தலைவலி, உடல் வலி, மஞ்சள், வாந்தி மற்றும் வயிற்று போக்கு இதன் அறிகுறிகளாக உள்ளன

மழை காலத்தில் உணவில் நிலவும் அசுத்தம் மற்றும் தண்ணீர் குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மலச்சிக்கல், வாயு பிரச்னை, அஜீரணம், வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எனவே உணவு, தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்

தேங்கி கிடக்கும் நீரில் உற்பத்தியாகும் கொசு காரணமாக சிக்குன்குனியா தொற்று பாதிப்பு உருவாகலாம். சோர்வு, குமட்டல் மற்றும் பலவீனம் போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளன

குழந்தைகளை தொற்று பாதிப்புகளில் இருந்து தடுக்க ஆரோக்கியமான உணவுகளான நட்ஸ், பழங்களை சாப்பிட வைக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருக்க தினமும் 2 லிட்டர் அளவாவது தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்

பயணம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்?