Coimbatore Best Foods : கோவைக்கு போலாமா.. இந்த உணவுகளை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க
Pixabay
By Pandeeswari Gurusamy Mar 01, 2025
Hindustan Times Tamil
கோவையில் மருதமலை முருகன் கோயில், ஈஷா யோகா மையம் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற தலங்கள் உள்ளது. இங்கு வந்து செல்லும் மக்கள் இந்த உணவுகளை ருசித்து பாருங்கள்.
Pixabay
மற்ற ஊர்களை பற்றி பேசும் போது ருசி என்றாலே ஏதோ ஒரு உணவில் இருந்துதான் தொடங்கும். ஆனால் கோவையை பொருத்தவரை தண்ணீரே குடிக்க மிகவும் திருப்திகரமான உணர்வை தரும். காரணம் சிறுவாணி தண்ணீர்.
Pixabay
கோவை என்றாலே பலருக்கும் நினைவில் வருவது அரிசி பருப்பு சாதம்.. கொங்கு மக்களின் மிகவும் விருப்பமான உணவு இது. நீங்களும் இதை டிரை பண்ணலாம்.
Pixabay
கோவை மக்களின் மற்றொரு பிரியமான உணவு பச்சை பயறு கடையல்.. சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு ஒரு கரண்டி பச்சை பயறு கடையல் விட்டு சாப்பிடுவதே தனி ருசிதான்.. நீங்களும் டிரை பண்ணுங்க
கோவை மாநகரின் தெருவோர கடைகளில் கிடைக்கம் ஒப்புட்டுக்கு தனி ருசி உள்ளது. இங்கு இனிப்பு ஒப்புட்டு. காரம் சேர்த்த ஒப்புட்டு, தேங்காய் ஒப்புட்டு என பல விதமாக கிடைக்கும்.
கோவையின் கொள்ளு ரசம் , கொள்ளு பருப்பு கடையல், போன்ற உணவுகள் மிகவும் ருசியானது.
காரசாரமான பள்ளிப்பாளையம் சிக்கன் ரெசிபி கோவையில் நீங்கள் முயற்சிக்க ஒரு தரமான சிக்கன் ஐட்டம்
Pexels
அதிக காரம் சேர்க்காத கொங்கு ஸ்டைல் பிரியாணிக்கு தனி ருசி இருக்கும். நீங்களும் டிரை பண்ணுங்க.
Pexels
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.