பல்லிகளால் தொல்லையா.. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பல்லிகளை விரட்டுவது எப்படி
Canva
By Pandeeswari Gurusamy Apr 13, 2025
Hindustan Times Tamil
ஒரு கட்டிடத்தில் முதலில் குடியேறுவது இந்த பல்லிகள் தான். பலருக்கும் பல்லிகள் என்றாலே அலர்ஜி தான். வீட்டில் எத்தனையோ பூச்சிகள் இருந்தாலும் இந்த பல்லிகளை பார்த்தாலே பலருக்கும் பயம் தான்.
Pixabay
பல்லிகளை நமது வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பின் வரும் குறிப்புகளை கொண்டு ஸ்பிரே தயார் செய்து விட்டால் பல்லிகளை விரட்டி விடலாம்.
பத்து கற்பூரம், ஐம்பது மில்லி லிட்டர் டெட்டால், அரை லிட்டர் தண்ணீர், இருபது மில்லி சோப் ஆயில், ஒரு லிட்டர் அளவு ஸ்பிரே பாட்டில் இருந்தால் போதும்.
கற்பூர வில்லைகளை உடைத்து நன்றாக பொடியாக மாற்றுங்கள். அந்த பொடியோடு சோப் ஆயில், டெட்டால் இரண்டையும் சேர்த்து கிளறுங்கள்.
நீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கரைசலாக மாற்றவும். தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளலாம்.
தயார் செய்த கரைசலை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்கி பல்லி இருக்க கூடிய இடங்களில் அடிக்கவும்.
ஸ்பிரே செய்யும் போது அந்த வாசனை பிடிக்காமல் பல்லிகளோடு சேர்ந்து மற்ற பூச்சிகளும் ஓட்டம் பிடிக்குமாம்.
சனி கோடி கோடியா கொட்டணுமா.. தோஷங்கள் நீங்க இந்த சின்ன பரிகாரத்தை ட்ரை பண்ணுங்க!