தேனி மாவட்டத்தில் பிறந்து திரைத்துறையில் கோலோச்சிய திரை ஆளுமைகள் குறித்து அறிவோமோ?
By Marimuthu M Mar 15, 2025
Hindustan Times Tamil
நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பட்டினத்தார் என்னும் படத்தில் சோழமன்னனாக நடிக்கத்தொடங்கி, கேம் என்னும் படம் வரை நடித்தார்.
நடிகர் சுருளிராஜன் தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சார்ந்தவர். 1965ஆம் ஆண்டு இரவும் பகலும் என்னும் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத்தொடங்கி, காமெடி நடிகராக உச்சம் தொட்டவர்.
இசையமைப்பாளர் இளையராஜா, தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். அன்னக்கிளி என்னும் படத்தில் இசையமைப்பாளராகப் பணியைத் தொடங்கிய இளையராஜா இந்திய சினிமாவின் இசை முன்னோடி!
16 வயதினிலே என்னும் படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன இயக்குநர் பாரதிராஜா, தேனி மாவட்டம், அல்லிநகரத்தைச் சேர்ந்தவர். அன்று தொடங்கிய இவரது திரைப்பயணம், ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்னும் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலாஜி படம் வரை விரிகிறது.
ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை பல தலைமுறை ஹீரோக்களுக்கு பாட்டு எழுதிய கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டம், வடுகபட்டியைச் சார்ந்தவர். எவ்வளவு உயரம் சென்றாலும் மாதம் ஒரு முறை சொந்த ஊரான வடுகபட்டிக்கு வருவதை வழக்கமாகவே கொண்டவர்.
இயக்குநர் கஸ்தூரி ராஜா, தேனி மாவட்டம், மல்லிங்காபுரத்தைச் சார்ந்தவர். என் ராசாவின் மனசிலே, எட்டுப்பட்டிராசா, வீரத் தாலாட்டு என பல ஹிட் படங்களைக்கொடுத்தவர். இவரது மகன்கள் தான் செல்வராகவன், தனுஷ் ஆவர்.
சேது என்னும் படம் மூலம் சினிமாவில் இயக்குநர் ஆன பாலா, பாலுமகேந்திராவின் மூத்த சீடர் ஆவார். இவர் தேனி மாவட்டம், நாராயணத்தேவன்பட்டியைப் பூர்வீகமாகக்கொண்டவர். இவரது பால்ய காலம் முழுக்க பெரியகுளம் நகரில் கழிந்தது.
கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?