ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். 

Canva

By Suriyakumar Jayabalan
Apr 05, 2025

Hindustan Times
Tamil

அந்த வகையில் சூரிய பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினமே தமிழ் மாதங்களின் முதல் மாதமான சித்திரை மாதம் பிறக்கின்றது. அதுவே தமிழ் புத்தாண்டு திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Canva

சூரிய பகவான் மேஷ ராசியில் புகுந்து சித்திரை மாதத்தை பெற்றெடுக்கின்ற காரணத்தினால் அன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் சூரிய பகவானின் ஆசீர்வாதத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

மிதுன ராசி  உங்கள் ராசியில் 11 ஆவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு சித்திரை மாதத்தில் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய வீடு மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

Canva

கடக ராசி  உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் சித்தரை மாதத்தில் இருந்து உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

சிம்ம ராசி  உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் நுழையப் போகின்றார். அதனால் சித்திரை மாதத்தில் இருந்து உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. 

Canva

விருச்சிக ராசி இந்த மாதத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு நல்ல வெற்றியை கொடுக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது.

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash